S. Vinothini

2 Books

இவர் பெயர் செ. வினோதினி. தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழின் மீது அதிக பற்றும் ஆர்வமும் கொண்ட இவர், பல விதமான தமிழ்ப் பணிகளை பல மாவட்டங்களில் செய்து வருகிறார்.

மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என்று அனைவருக்கும், பலவிதமான போட்டிகளையும், சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார். ஒரு சிறந்த சமூக ஆர்வலராக திகழ்கிறார். பல கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, சிறப்புரையை அளித்துள்ளார்.

இவருடைய கவிதைகள் மூன்று பெரும் விருதுகளை பெற்றுள்ளது. இவரின் சிறந்த செயல்பாட்டின் காரணமாக, முன்னாள், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், திருமதி சாந்தா ஐஏஎஸ் அவர்கள்,

"பெரம்பலூரின் சாதனைப்பெண் விருது" என்ற விருதினை இவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளார். இவர் தற்போது அகழ் - மாத இதழ் என்ற இதழைத் தொடங்கி, அதில் பலவிதமான கவிதை, கட்டுரை, சிறுகதைப் போட்டிகளை நடத்தி வருகிறார். அவ்வாறு நடத்தப்பட்ட போட்டிதான், "கொரனாக் கற்றுத்தந்த வாழ்வியல்" என்ற தலைப்பிலான கவிதை, கட்டுரை, கதை போட்டிகள். பல கவிதைகளும் கதைகளும் வந்திருந்தாலும், ஒரு சில சிறப்பான படைப்புகளைத் தொகுத்து ‘மறுக்கப்பட்ட வாழ்க்கையின் காலம்’ என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

Interviews

All S. Vinothini's Books

View Another Authors